Tuesday, August 16, 2011

இலையுதிர் காலம்












இலை ஆடை உதிர்த்து
நிர்வானமாய் நின்ற மரம்
எஞ்சிய இலைகள்
கவலையில் நடனம்..

- ச.வாசு  (எழுதிய தினம்: அக்டோபர் 2003ல் ஒரு நாள்)

தேடினேன்

யாரோ சொன்னது போல்
தேடல் கூட பாடல் போல சுகம்தான்
பணத்தை தேடுகிறேன்
நல்ல மனத்தை தேடுகிறேன்
புகழை தேடுகிறேன்
வாழ்வின் பொருளை தேடுகிறேன்
என்றோ தொலைந்துபோன என்னையே தேடுகிறேன்
என்னதான் வேண்டுமென்று எனக்குள் தேடுகின்றேன்..

- ச.வாசு  (எழுதிய தினம்: 2003ல் ஒரு நாள்)

சிகரெட்















தலை நரைத்த பாதிரியார்
கைப்பிடித்தவனை கைவிட்ட கைகேயி
தானும் உருகி உண்டவனை உருக்கும் மெழுகுவர்த்தி
வளர்பிறை இல்லா வெள்ளை நிலா
சமத்துவம் வளர்க்கும் சன்மார்கவாதி
கதிரவன் பிடித்த காலை சிகரெட் மேகமாய் ஓடியது
நாளுக்கு இருமுறை கைசுட்ட சிகரெட் - காதல் மயக்கம்
‘காதலே கைவிடினும் என் சிகரெட்டை கைவிடேன்’ காதலன் சூளுரைத்தான்.