Monday, November 14, 2011

2000க்கு பிறகு வெளிவந்த இளையராஜாவின் மெலடி பாடல்கள்...

2000க்கு பிறகு பல புது இசையமைப்பாளர்கள் தமிழ் திரையுலகில் காலோச்சிய காலகட்டத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த படங்கள் குறைந்தது என்னவோ உண்மைதான். ஆனால் வந்த குறைவான படங்களிலும் தன் தனி முத்திரையை விடாது நிருபித்திருப்பார் இசைஞானி! அதுவும் குறிப்பாக காதல் மெலடிகள் என்றால் ராஜா ராஜாதான் என்று தனக்குரிய இடத்தை தக்கவைத்துக்கொண்டார். இதுபோன்ற மனதை வருடும் மெலடி பாடல்களின் தொகுப்பை சுட்டிகளுடன் வழங்கியுள்ளேன்.

 
1. இளங்காத்து.. - பிதாமகன்
2. கஜிரா.. - ஒரு நாள் ஒரு கனவு
3. ஒளியிலே.. - அழகி
4. நின்னை சரணடைந்தேன்.. - பாரதி
5. உன்னவிட.. - விருமாண்டி
6. மஞ்சள் பூசும்.. - ஃப்ரெண்ட்ஸ்
7. தென்றலை கண்டுகொள்ள.. - நிலவே முகம் காட்டு
8. வானவில்லே.. - ரமணா
9. அப்படி பாக்றதென்ன.. - இவன்
10. நீ பார்த்த.. - ஹே ராம்
11. எனக்கு பிடித்த பாடல் - ஜூலி கணபதி
12. அந்த நாள் ஞாபகம்.. - அது ஒரு கனா காலம்
13. கொஞ்சம் கொஞ்சம்.. - மாயக் கண்ணாடி
14. ஒரு பொற்காலம்.. - கஸ்தூரி மான்
15. பூ பூத்தது.. - மும்பை எக்ஸ்பிரஸ்
16. ஒருநாள் ஒரு கனவு.. - கண்ணுக்குள் நிலவு
17. குண்டுமல்லி.. - சொல்ல மறந்த கதை

Friday, September 30, 2011

படம் பெயர் தெரியாத (எனக்கு தெரியாத) இளையராஜா பாடல்கள்


இளையராஜாவின் சில பாடல்கள் அவ்வப்போது கேட்டு ரசித்திருப்பேன் ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களின் பெயர் மட்டும் நினைவில் தங்கவேயில்லை. இதனாலேயே இந்த பாடல்களை அதிகம் கேட்க முடியாமல் போய்விட்டது என்பது என் வருத்தம். இது போன்ற பாடல்களை இணையத்தின் உதவியுடன் படம் பெயர் கண்டறிந்து, தொகுத்து சுட்டிகளுடன் வழங்கியிருக்கிறேன்..


 1. மஞ்சள் நிலாவுக்கு.. - முதல் இரவு 

2. தவிக்குது தயங்குது.. - நதியை தேடி வந்தகடல்

3. தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்.. - முடிவல்ல ஆரம்பம்

4. ஒரு குங்கும செங்கமலம்.. - ஆராதனை

5.ஓர் பூமாலை.. - இனிய உறவு பூத்தது

6. பூந்தென்றல் காற்றே வா.. - மஞ்சள் நிலா

7. செவ்வந்தி பூக்களில்.. - மெல்ல பேசுங்கள்

8. ஓ நெஞ்சமே.. - எனக்காக காத்திரு

9. தென்றல் வந்து.. - ஒரு ஓடை நதியாகிறது

10. தேவதை இளம்.. - ஆயிரம் நிலவே வா

11. கீதம் சங்கீதம்.. - கொக்கரக்கோ

12. அல்லா.. - சந்திர லேகா

13. கூந்தலிலே.. - பால நாகம்மா

14. வச்ச பார்வை.. - இளமை கோலம்

15. சங்கத்தில் பாடாத.. - ஆட்டோ ராஜா

16. வா பொன் மயிலே.. - பூந்தளிர்

17. இளஞ்சோலை பூத்ததா… - உனக்காகவே வாழ்கிறேன்

18. கண் மலர்களின்.. - தை பொங்கல்

19. விழியில் உன் விழியில்.. - ராம் லக்‌ஷ்மன்

20. நான் உன்ன நினைச்சேன்.. - கன்னில் தெரியும் கதைகள்


Thursday, September 22, 2011

இந்த பாடல்களுக்கு இசை இளையராஜா இல்லையாமே...

1970 இறுதியிலும் மற்றும் 1980 களில் மற்ற இசை அமைப்பாளர்கள் இசையமைத்த சில நல்ல திரைப்பட பாடல்களை நான் பலநாட்கள் இளையராஜா இசையமைத்தது என்றே நினைத்திருந்தேன். உண்மை தெரிய வந்தபோது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது என்றே சொல்லவேண்டும். இப்படிப்பட்ட பாடல்களை தொகுத்து சுட்டிகளுடன் அளித்துள்ளேன்.


1. பூவண்ணம்.. - அழியாத கோலங்கள் - சலில் சௌத்ரி

2. பூந்தேனில் கலந்து.. - ஏணிப்படிகள் - கே.வி.மகாதேவன்

3. பட்டுவண்ண ரோசாவா.. - கன்னி பருவத்திலே - சங்கர் கணேஷ்

4. பொன்மானை தேடி.. - எங்க ஊரு ராசாத்தி - கங்கை அமரன்

5. மூக்குத்தி பூ மேல.. - மெளனகீதங்கள் - கங்கை அமரன்

6. விழிகள் மேடையாம்.. - கிளிஞ்சல்கள் - டி.ராஜேந்தர்

7. விடிய விடிய.. - போக்கிரி ராஜா - எம்.எஸ்.விஸ்வநாதன்

8. ஆனந்த தாகம்.. - வா இந்த பக்கம் - ஷ்யாம்

9. ஒரு காதல் என்பது.. - சின்ன தம்பி பெரிய தம்பி - கங்கை அமரன்

10. சந்தனம் பூச.. - துடிக்கும் கரங்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Thursday, September 15, 2011

இளையராஜாவின் இசையில் சிறந்த "prelude"உடன் தொடங்கும் பாடல்கள்...

இளையராஜவின் இசை என்றாலே பெரும்பாலான பாடல்களில் "prelude" அசத்தலாக இருக்கும். ஆனாலும் இந்த பின்வரும் பாடல்களில் வரும் "prelude"களை கேட்கும்போது ஒவ்வொரு முறையும் சிலாகிக்கிறேன்.. நீங்களும் கேட்டு மகிழ பாடல்களின் சுட்டிகளை  அளித்துள்ளேன்..








70 மற்றும் 80 களில் வெளிவந்த பாடல்கள்..

1. ஏதோ மோகம் - கோழி கூவுது

2. சங்கீத மேகம்.. - உதய கீதம்

3. பூ மாலையே.. - பகல் நிலவு

4. சாலையோரம்.. - பயணங்கள் முடிவதில்லை

5. வெட்டவெளி.. - நல்ல நாள்

6. இங்கே நான்.. - சாதனை

7. ஆனந்த ராகம்.. - பன்னீர் புஷ்பங்கள்

8. பூங்கதவே.. - நிழல்கள்

9. மனதில் என்ன.. - பூந்தளிர்

10. மயிலே மயிலே.. - கடவுள் அமைத்த மேடை

11. ராஜராஜ சோழன்.. - ரெட்டைவால் குருவி

12. தூங்காத விழிகள்.. - அக்னி நட்சத்திரம்

13. மெல்ல மெல்ல.. - வாழ்க்கை

14. சந்தன காற்றே.. - தனிக்காட்டு ராஜா

15. என்னுள்ளில் ஏதோ.. - ரோசாப்பூ ரவிக்கைக்காரி

16. மதனமோக.. : இன்று போய் நாளை வா

17. ஓ வெண்ணிலாவே.. - ஆனந்த கும்மி

18. என் வானிலே.. - ஜானி

19. கல்யாணம் வைபோகம்.. - நான் மகான் அல்ல

90 களில் வெளிவந்த பாடல்கள்..

1. என்னுள்ளே.. - வள்ளி

2. நீ பார்த்த.. - ஹே ராம்

3. ரம்பம்பம் - மைக்கேல் மதன் காமராஜன்

4. மொட்ட மாடி.. - அஞ்சலி

5. காதல் கவிதைகள்.. - கோபுர வாசலிலே

6. இதழில் கதை... - உன்னால் முடியும் தம்பி

7. மாங்குயிலே.. - கரகாட்டக்காரன்

8. பாரிஜாத பூவே.. - என் ராசவின் மனசிலே

9. நீ ஒரு காதல்.. - நாயகன்

10. ராக்கம்மா கையதட்டு.. - தளபதி

11. பட்டு நிலா.. # வால்டர் வெற்றிவேல்

பின்குறிப்பு: இவை நினைவிற்கு எட்டிய  சில பாடல்கள் மட்டுமே. சில நல்ல "prelude" பாடல்கள் ஹம்மிங்குடன்  இணைந்து இருந்ததால் இந்த தொகுப்பில் சேர்க்கவில்லை.







Sunday, September 11, 2011

டிவிட்டர் - இந்த வாரம் ரசித்தவை..

சாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்'வியாதிகளுக்கும், பிணத்தை தேடி தின்னும் அகோரிகளுக்கும் என்ன வித்தியாசம்?


பெத்த பொண்ணுக்கும் பரிட்சை பேப்பருக்கும் ஒரே ஒத்துமை தாங்க...ரெண்டயுமே கட்டி கொடுக்கரவரைக்கும் தலவலிதான்#மூனுமுடிச்சி


பின்னிரவில் ரசித்த மெலடிக்கு இடைஞ்சல் என பாத்திரம் கழுவும் ஓசையை கடிந்து கூச்சலிட்ட வாய் கூச்சமின்றி ருசிக்கிறது காலைஉணவை,கழுவிய தட்டில்!


"ல‌வ் ப‌ண்ணுங்க‌ சார், லைஃப் ந‌ல்லா இருக்கும்" - மைனா; "மூடிட்டு ப‌டிங்க‌ சார், லைஃப் இன்னும் ந‌ல்லா இருக்கும்" - மை நைனா

நம்பிக்கையூட்டும் துப்புகள் கிடைத்துள்ளன: ப.சிதம்பரம் # பான் பராக்கா? மானிக் ச்ந்த்தா?!

ஆண்களின் நகலாய் இருப்பதில் எந்த பெண்ணுரிமையை நிலைநாட்ட போகிறார்கள்?

குண்டுவச்சவன பத்தி துப்பு கொடுத்தா 5 லட்சம் - புலனாய்வு துறை # என்னது உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இல்லையா?
மும்பை தாக்குதல் அஜ்மல் வழ்க்கின் ஒருநாள் செலவு ரூ.1லட்சம் #இதுதாம்பா மறைமுக போர்

ஆண்கள் பல நல்ல முடிவுகளை "பாத்ரூம்"லும், பல மோசமான முடிவுகளை "பெட்ரூம்"லும் எடுக்கிறார்கள்

 
மன்னிப்பு ஒரு வார்த்தை போதும் பெண் மனதை மீண்டும் மீண்டும் தடுமாற வைக்க !
வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைவிதிப்பு # அது யாருயா... பிரதமரையே வெளிநாட்டுக்கு போகக்கூடாதுன்னு தடைவிதிக்கிறது

பாரில் மப்படித்தவன் "இன்றைக்கு என்ன கிழமை?" என்று கேட்கிறான்! அதற்கு "எனக்கு தெரியாது நான் வெளியூரு" என்கிறான் ஓவராக மப்படித்தவன் !

தனுஷ் ஒரு படத்தில் பைக்கை வைத்துகொண்டு அதில் யாரையும் ஏறவிடமாட்டார்..அது போல் இப்போது வைக்கோ..கட்சியை வைத்துகொண்டு...

சென்னை மாநகராட்சியை பா.ம.க கைப்பற்றும் - ஜி.கே.மணி # அண்ணே அது என்ன பாபா பட பொட்டின்னு நினைச்சீங்களா? அய்யோ,அய்யோ.!

பணத்திற்காக திருமணம் செய்யாதீர்கள் ! உலகத்தில் குறைந்த வட்டிக்கு பணம் கடனாக கிடைக்கிறது !

அம்மா முன்றெழுத்து கலைஞர் நான்கெழுத்து மாறி மாறி இவங்க நாட்ட ஆள்வது நம்ம தலையெழுத்து...
உள்ளாட்சித்தேர்தலில் காங். தனித்து போட்டி: யுவராஜா # போடா போடா வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு !

 
தல சஸ்பென்சன்ல இருந்தாலே படம் ஓடுமாம்!!? அடங்கொப்பத்தா அவர் டியூட்டில இருந்தா மாதிரி நடிச்ச ஆஞ்சநேயா மறந்து போச்சா உங்களுக்கு?


புளிப்பு மிட்டாய் மாதிரிதான் வாழ்க்கை. பிடிக்கவும் செய்யுது. சாப்பிடும் போது மூஞ்சி கோணலாவும் போவுது.
அடப்பாவிங்களா.. அஜித்துக்கோ விஜயக்கோ ரசிகனா இல்லாம தமிழ்நாட்டுல ஒருத்தன் இருக்கவே முடியாதுங்கற மாதிரில்ல பேசுறீங்க.


இரண்டு பெக்’கை சாத்திவிட்டு இயற்கையன்னை நம்மைத் தழுவப்போகிறாள் என்று அருவியினுள் நுழைந்தால் தாளித்துவிட்டாள்! #என்னா அடி #குற்றாலம்

மேனஜரிடமும் மனைவியிடமும் எரிச்சலையும் காட்டமுடியவில்லை துணிச்சலையும் காட்டமுடியவில்லை # என்ன வாழ்க்கைடா?

அப்பாவை போலவே மாப்பிள்ளை வேண்டும் என தேடி திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் திருமணத்திலேயே அம்மா அதிகமாய் அழுகிறாள்.!

பூமில என்னென்ன இருக்குங்றதே பயலுகளுக்கு காதல் வந்தாதான் தெரியும் போல,பூவுங்குறானுக..நிலவுங்குறானுக..கடசியா கவிதங்கிறானுக :-)

டாக்டரை விட டோக்கன் நம்பர் கூப்பிடும் பையனின் பந்தா தாங்கமுடிவதில்லை..# மருத்துவமனை

 
நம்ம நாட்டுல டிரெயின் லேட்,பஸ் லேட்,ஜட்ஜ்மென்ட் லேட், ஆபிஸ்க்கு லேட், எல்லாமே லேட்,சரியா டைம்க்கு நடக்கிறது குண்டுவெடிப்பு மட்டும் தான்

எல்லோருக்கும் வரலாற்றில் இடமுண்டு,பாடப் புத்தகத்தில் இடம்பெருவது யார் எனபதில்தான் பிரச்சினை !

 
தனக்கு தெரியாத விஷயமே இல்லைங்கற தொணியில் பேசறவங்ககிட்ட கேக்கணும் #எப்ப சாவீங்கனு தெரிஞ்சா சொல்லுங்க!?

Wednesday, September 7, 2011

இந்தியாவில் மரண தண்டனை தேவையா...?


சமீப காலத்தில் இந்திய ஊடங்களில் எழுந்த ஒரு கேள்வி நாட்டின் சட்டத்தில் மரண தண்டனை தொடரப்பட வேண்டுமா என்பது. எனது பார்வையில் இந்த கேள்விக்கான விடைகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.


மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் முக்கியமான வாதம் deterrence. அதாவது மரண தண்டனை என்பது அந்த குற்றவாளி தண்டிக்கபடுவதையும் தாண்டி சமூகத்திற்கு ஒரு செய்தியை அழுத்தமாக சொல்லவே பயன்படுத்தப்படுகிறது. இதைப்போல் குற்றங்கள் செய்தால் நாளை உங்களுக்கும் இந்த தண்டனைதான் என்ற பயம் தடவிய செய்திதான் அது. குற்றம் செய்ய எண்ணுபவர்கள் மரண தண்டனைக்கு பயந்து குற்றம் செய்வதை தவிர்ப்பார்கள் என்பதுதான் இதன் அடிப்படை. இது போன்ற உயிர்கொல்லி வழக்கங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட அல்லது வெறும் பயங்கரவாதிகள் மட்டுமே வசிக்கும் தேசத்திற்கு வேண்டுமானால் ஏற்ப்புடையாதாக இருக்குமே ஒழிய இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்தாது என்பது என் நிலைப்பாடு.
உலகத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் மரண தண்டனையை விலக்கிவிட்ட காலகட்டத்தில் இந்தியாவில் இது நீடிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது


முதலாவதாக, இந்தியாவில் கொடூரமான குற்றங்களும் குற்றவாளிகளும் குறைந்துவிட்டதாக நான் கருதவில்லைஅதே சமயத்தில் மரண தண்டனையால் மட்டுமே இந்த குற்றங்களை குறைத்துவிட முடியும் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. உதாரணமாக இணைய தளத்தில் இது சம்பந்தமாக ஆதாரங்கள் தேட தலைப்பட்டால் மரண தண்டனை ஒரு சமூகத்தில் குற்றங்கள் குறைவதற்கு தவுவதில்லை என்ற கருத்திற்கே பெரும்பான்மையான சான்றுகள் சிக்குகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கனடா போன்ற நாடுகள் பல சமூக ஆய்வுகள் நடத்தி, அதில் மரண தண்டனைக்கும் தங்கள் நாட்டில் குற்றங்கள் குறைவதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தீர்மானமாக தெரிந்த பின்னரே மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்கி இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இது போன்ற அறிவியல் ரீதியான சமூக ஆய்வுகள் ஏதும் நடத்தப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. இது போன்ற எந்த சமூக ஆய்வுகளும் மேற்கொள்ளாத பட்சத்தில் மரண தண்டனை வெறும் உள்ளுணர்வின் அடிப்படையிலும் யூகத்தின் அடிப்ப்டையிலும் ஏன் தொடரப்பட வேண்டும் என்பதே என் பிரதான கேள்வி.


என்னை பொருத்தவரை குற்றவாளிகள் இரண்டு வகை. உணர்ச்சி வசப்பட்டு தன்னிலை இழந்த நிலையில் குற்றம் இழைப்பவர்கள் முதல் வகை. தற்காப்புக்காக மற்றும் கோபத்தில் நடக்கும் கொடூரங்கள் புரிபவர்கள் இதில் அடங்குவார்கள். இரண்டாவது வகை குற்றவாளிகள் திட்டமிட்டு குற்றம் புரிபவர்கள். சுய ஆதாயத்திற்காகவும், கொண்ட கருத்திற்காகவும் குற்றங்கள் செய்பவர்கள் இதில் வருவார்கள். இவர்கள் தங்கள் செய்யும் குற்றத்தின் பின்விளைவுகளை அறிந்தே செய்கிறார்கள். எதற்கும் தயார் என்ற மன நிலையில் செயல்படும் இந்த வகை குற்றவாளிகளை மரண தண்டனை பயத்தால் குற்றம் செய்வதிலிருந்து தவிர்க்க இயலும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் மரண தண்டனை இருப்பதால் சமூகத்தில் எதிர்வினையாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்ற மனோபாவம் சமூகத்தில் இன்னும் கொடுமைகளை நடைபெற தூண்டும் என்றே எனக்கு படுகிறது. மாறாக மரண தண்டனையை ஒழித்து சக மனிதனின் உயிரை மதிக்கும் சமூகம் என்ற நிலையை உருவாக்கினால் கொடுமையான குற்றங்கள் குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்.


அடுத்ததாக, தன் உயிரையே மாய்த்துக்கொள்ள உரிமையில்லாத போது சக மனிதனின் உயிரை எடுக்க உரிமை இருக்கிறதா என்ற கேள்வி மரண தண்டனைக்கு எதிராக எழுகிறது. இந்த இடத்தில் மரண தண்டனை குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. மன உளைச்சலுக்கும், காயத்திற்கும் ஆளான இவர்களுக்கு குற்றவாளியை மன்னிக்கும் மனப்பான்மை இருக்குமா என்பதை கூற இயலாது. மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுட்கால சிறை தண்டனை செயல்படுத்தபடும்போது  அதன் வீரியத்தை பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது. வாழ்நாள் முழுவதும் தான் இழைத்த குற்றத்தை நினைத்து அந்த குற்றவாளி தனியே வேதனை படுவதைவிட என்ன தண்டனை இந்த சமூகம் வழங்கிவிட முடியும் என்பதை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதல் அடையலாம். இது குற்றவாளிகளை வக்காளத்து வாங்கும் முயற்சியல்ல. சக மனிதர்களின் உயிர்களை மதிப்பதன் மூலம் பிற்காலத்தில் சமுதாயத்தில் குற்றங்களை குறைப்பதற்கான ஒரு முயற்சியே.


மற்றபடி அரசியல் காரணங்களுக்காகவும், அரசு இயந்திரத்தின் குளருபடிகளாலும் நிரபராதிகள் தண்டிக்கப்பட சூழ்நிலைகள் அனுமதிப்பதால்இந்த ஆயுட்கால சிறை தண்டனை என்ற மாற்று நிரபராதிகளை மீட்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது


கடைசியாக, மரண தண்டனை நீக்கப்படும் அளவிற்கு இந்திய சமூகம் நல்லொழுக்க நிலையை இன்னும் அடையவில்லை என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. ற் பண்புகளிலும், மனித நேயத்திலும் மரண தண்டனை வழக்கத்தில் இல்லாத எந்த நாட்டு சமூகத்தைவிட நாம் தாழ்ந்துவிடவில்லை என்றே கருதுகிறேன். அன்பிலும், அறத்திலும், பக்தியிலும், முக்தியிலும் பல்லாயிர கணக்கான ஆண்டுகள் தழைத்து வளர்ந்த சமுதாயம் இது. சில பல நச்சு பாம்புகள்  அவ்வப்போது தோன்றி கொடூரங்கள் செய்யத்தான் செய்கின்றன. ஆனால் மரண தண்டனை என்ற பயத்தினால் மட்டுமே ந்த நிலையை மாற்றிவிட முடியும் என்று நான் நம்பவில்லை. மாறாக மனித நேயத்தை வளர்ப்பதன் மூலம் சமூகத்தில் குற்றங்களை குறைக்க முடியும் என்று ஆழமாக நம்புகிறேன்.